Advertisment

''ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்''- அமைச்சர் ஐ.பெரியசாமி அட்வைஸ்

'Just keep one thing in mind'-Minister I. Periyasamy Advice

'ஒரு ரூபாய் கூட வாங்காமல் அரசுப் பணி வழங்குவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியே' என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள், கணவனை இழந்த பெண்கள் உட்பட பலர் கூட்டுறவுத்துறை சார்பாக நடத்தப்படும் நியாயவிலைக் கடைக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது. அதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியைநேரில் சந்தித்து சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

Advertisment

அவர்களை வாழ்த்திப் பேசியஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 'இந்தியாவிலேயே அரசுப் பணி ஒரு ரூபாய் கூட வாங்காமல் வழங்கி வருவது திராவிட மாடல் ஆட்சி.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்மக்களுக்கான நல்லாட்சி தருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 316 பேருக்கு நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடை பணிக்காக தேர்வு பெற்றவர்கள் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் நியாயவிலைக் கடைக்கு பொருட்களை வாங்க வரும் அனைவரும் அடித்தட்டு மக்களே. அவர்களிடத்தில் அன்பாக பேசி அவர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை தவறாமல் வழங்குவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் இந்த மக்களுக்கான பணியின் பொறுப்புணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe