Advertisment

“இது தொடக்கம் தான்; எஞ்சியுள்ளதையும் மீட்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்! 

This is just the beginning! - Chief Minister MK Stalin's tweet!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/05/2022) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகத்தை வெளியிட, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.இ.கல்பனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன. இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Tweets Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe