ஜூன் 29- ஆம் தேதி மருத்துவக் குழுவினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஆலோசிக்கிறார்.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஜூன் 30- ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.