Advertisment

ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்!

July 23 central budget presentation

Advertisment

நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றிப்பெற்று 3 வது முறையாக மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் ஜூலை 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 23 ஆம் தேதி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

தேசிய ஜனநாயக் கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இது நாடாளுமன்ற பட்ஜெட்டில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் எனப் பலரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். மேலும் விலை வாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

budget
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe