ADVERTISEMENT

ஜூலை 17- ஆம் தேதி அன்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! 

02:29 PM Jul 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் இன்று (11/07/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் 'கலைஞர் அரங்கில்' நடைபெறும். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில், வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT