
நடிகை தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடாருக்கு பிப்.3 ஆம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பனங்காட்டுப் படை கட்சியைச் சேர்ந்த ஹரிநாடார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பிரபல திரைப்பட நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றது தொடர்பான வழக்கில் நேற்று தமிழக போலீசார் ஹரிநாடாரை கைது செய்தனர்.
சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி தனக்கு கொலை மிரட்டல் விட்டதாக கொடுத்த புகாரை அடுத்துதமிழக போலீசார் கர்நாடக பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளிடம் ஹரி நாடாரை கைது செய்து விசாரிக்க மனுதாக்கல் செய்திருந்தனர். அதனையடுத்து ஹரிநாடாரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் ஹரிநாடாருக்கு பிப்.3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஹரிநாடார் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அவரது ஆதரவாளர்கள் சிலர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற காவல் கர்நாடக பரப்பன அக்ரஹரா சிறையிலோஅல்லது புழல் சிறையிலோஇருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us