Advertisment

நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு! 

Judgment in the case of Nalini and Ravichandran demanding release today!

தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் படி, விடுதலை செய்யக்கோரி நளினி,ரவிச்சந்திரன்ஆகியோர் தாக்கல் செய்தவழக்குகளைச்சென்னை உயர்நீதிமன்றம் இன்று (17/06/2022) தீர்ப்பு வழங்கவுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர்ராஜீவ் காந்திகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், நளினி மற்றும்ரவிச்சந்திரன்ஆகியோர் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல்செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்டவர்களை உச்சநீதிமன்றத்தின்உத்தரவுப்படி, விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்பதால், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என்று வாதிட்டார்.

Advertisment

இதையடுத்து, இந்த வழக்கின்தீர்ப்பைச்சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று (17/06/2022) காலை 10.30 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

Chennai judgement nalini
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe