நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க ஏற்பாடு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை அளித்துள்ளார்.
அந்த மனுவில், நிலம் இல்லாதவர்களின் துயரத்தைப் பற்றி காலா திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாகவும், தங்களை போன்ற நிலமற்றவர்கள் துயரத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள காலா படத்தை பார்க்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் முதல் அனைத்து நீதிபதிகளும் கலா படத்தை பார்க்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.
ஸ்ரீதர் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.