/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1271.jpg)
நீதிபதிகளுக்கும்வழக்கறிஞர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த தேவையான உதவிகளை வழங்க தமிழ்நாடுஅரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதால், அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில்நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த தமிழ்நாடுஅரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டது.
மேலும், நீதிமன்ற வளாகங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்கு தமிழ்நாடுஅரசு அனைத்து உதவிகளையும் வழங்கிவருவதாகவும் குறிப்பிட்டனர்.
மருத்துவ ரீதியாக தேவைப்படுவோருக்குத் தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாதது என்பதால், நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)