Advertisment

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்திவதில் தீவிரம் காட்டாத அரசு அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்

kirupakaran

சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்துக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த ராமசாமிக்கு சொந்தமான 487 சதுர அடி கையகபடுத்தப்பட்ட நிலத்திற்கு, 2 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த இழப்பீட்டு தொகையை நில உரிமையாளர் ராமசாமி அதிகரித்து தரும் படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 33,44,750 ரூபாய் இழப்பீடாக கடந்த ஜூலை 31ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் 1993ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு இதுவரை வழங்காததற்காக ஒரு லட்ச ரூபாய் வழக்கு செலவாக மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

நீதிமன்றம் விதித்த கெடு கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக ராமசாமி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்திவதில் தீவிரம் காட்டுவதில்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மனுதாரர் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்காத நில ஆர்ஜித அதிகாரியான(சென்னை மாவட்ட ஆட்சியர்) அன்புசெல்வன் மார்ச் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

enforce court orders intend government officials judge condemned
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe