Advertisment

வழக்கறிஞரின் பண்பற்ற விசாரணைக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி

The judge apologized for the lawyer's rude interrogation

Advertisment

தர்மபுரி மாவட்டத்தில் மணி என்பவரின் பாகப்பிரிவினை தொடர்பான மேல்முறையீடு வழக்கின் விசாரணைசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்திமுன்பு நடைபெற்றது. இவ்வழக்கின் குறுக்கு விசாரணையின் போது இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், முதல் மனைவியின்பெண்களுக்கு தந்தை மீதான உரிமை குறித்து, தாயை அவமதிக்கும் விதமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக உயர் நீதிமன்றம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மனுதாரர்களைக் காயப்படுத்தவும், அவர்களை அவமானப்படுத்துவதற்கும் குறுக்கு விசாரணை இல்லை. தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் உணர்வுகளைப் படுகொலை செய்யும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Judge highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe