kgopla

Advertisment

தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் அம்மா கொண்டு வந்து செயல்படுத்திய திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், ஓய்வூதிய திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தவில்லை. அம்மா படத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி அரசு அவர் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தாதது வேதனை அளிக்கிறது. கருணாஸ் எம்எல்ஏவை கைது செய்ய அக்கறை காட்டிய தமிழக அரசு, எஸ்.வி.சேகர், எச் ராஜா போன்றோரை கைது செய்ய அக்கறை காட்டாதது ஏன். தமிழக அரசின் பாரபட்சமான போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது எனக்கூறினார்.