ஜெ.பி.நட்டா போட்ட உத்தரவு! கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ தங்கராஜ்

JP Natta put the order! Question Minister Mano Thangaraj

தமிழக அரசால், பாஜகவினர் தாக்குதல் எதிர்கொண்டு வருவதாகவும், அதன் காரணமாக அதனை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கமான எக்ஸில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழகத்தில் பாஜகவினர் கைது குறித்து ஆய்வு செய்ய ஜே.பி.நட்டா குழு அமைத்துள்ளார்! இந்தக் குழு பிஜேபியில் இணைந்துள்ள குற்றச் செயல்களில் பெயர் போன ரவுடிகளின் பட்டியலை எடுத்து அவர்கள் குற்றப் பின்னணியை விசாரித்து மக்கள் மன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe