
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜெ.பி.நட்டா சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 2024 தேர்தல் பணிகளுக்காக பாஜகவின் பல்வேறு தலைவர்களை சந்திக்க இருக்கும் அவர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு செல்கிறார். அங்கு மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க இருக்கிறார்.
இரவு நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேச இருக்கிறார்.