துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த ஜே.பி. நட்டா...

j.p. nadda celebrates pongal

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகபாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி .நட்டா தமிழகம் வருகை புரிந்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில் ஜே .பி .நட்டாவின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப்பார்க்கப்படுகிறது.

பொங்கல்விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்திருக்கும் நட்டாவை வரவேற்பதற்காக பாஜக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்திற்குதிரண்டு சென்றனர்.

பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷம் முழங்கிட கட்சியின் கொடியை அசைத்தவாறு அவரை உற்சாமாக வரவேற்றனர். கட்சியின் மாநில தலைவர் எல் . முருகன், பாஜக தமிழக பொறுப்பாளர் டி.டி. ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வ்ருகை புரிந்திருந்தனர் .

அங்கிருந்து மதுரவாயலில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கு செல்லும்நட்டா, அதனைத்தொடர்ந்துதுக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்ற பின்னர்இன்று இரவு 9:30 மணிக்கு மீண்டும் விமானம் மூலம்டெல்லி புறப்படவுள்ளார்.

Chennai PONGAL FESTIVAL
இதையும் படியுங்கள்
Subscribe