Advertisment

''இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்'' - எஸ்.பி. வேலுமணி பேட்டி

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கும் நிகழ்விற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''எங்களுடைய பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர், மக்களுக்காக பல்வேறு திட்டங்களைத் தந்து நான்கரை ஆண்டுகள் அற்புதமாக ஆட்சி நடத்தினார்.

Advertisment

அப்பொழுது அதிமுகவை எதிர்த்து அரசியல் போராட்டங்கள் நடைபெற்றது. பல்வேறு தேவையில்லாத பிரச்சனைகளை கிளறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் அதை எல்லாம் ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொண்டவர் எடப்பாடி. இன்றைக்கு இந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். கோவை மாவட்டத்திற்கு எவ்வளவு பெரிய வளர்ச்சியை கொடுத்தோம். இன்று இந்த இரண்டு வருடத்தில் எதுவுமே நடக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள், இளைஞர்கள் எல்லாம் பல்வேறு கருத்துக்களை உரிமைகளை வெளியிடும்போது காவல்துறை அவர்களைமிரட்டுகிறது கைது செய்கிறது'' என்றார்.

Advertisment

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe