
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றியவர் து. ராஜி. இவர் கடந்த 10 தினங்களுக்கு மேலாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (30.05.2021) காலை உயிரிழந்தார்.
இவருக்கு அலமேலு என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில, சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் ராஜி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாளிதழ் முகவராகவும், செய்தியாளராகவும் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.