Advertisment

பத்திரிகையாளர் மகள் எஸ்எஸ்எல்சி தேர்வில் சாதனை!

Journalist daughter achievement in SSLC exam

Advertisment

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். பத்திரிகையாளர். இவருடைய மகள் தமிழருவி. தாரமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்த இவர்,பொதுத்தேர்வில் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர், தமிழில் 97, ஆங்கில பாடத்தில் 98, கணிதத்தில் 100, அறிவியல் பாடத்தில்98, சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதம், சமூகஅறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாணவி தமிழருவி கூறுகையில், ''பள்ளி அளவில் முதல்மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளேன். பாட ஆசிரியர்கள் மற்றும் சகமாணவிகளின் ஒத்துழைப்பால்தான் என்னால் சாதிக்க முடிந்தது.எதிர்காலத்தில் மருத்துவர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்,''என்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்கள், சக மாணவிகள் தமிழருவிக்குவாழ்த்து தெரிவித்துள்ளனர்.

exam student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe