pen

Advertisment

கரூரில் பத்திரிக்கையாளர் ஆனந்தகுமார் கைதுசெய்யப்பட்டு கடந்த 14 நாட்களாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று கரூர் ஜெ.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மேலும் 15 நாட்கள் சிறை காவலை நீட்டித்து உத்தவிட்டார். இதனிடையே கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் ஆனந்தகுமார் சார்பில் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்தார் கரூர் மாவட்ட முதன்மை நீதிபதி நம்பிராஜன். வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் அவர்களின் வாதிட்டார்.

ஆனந்தகுமார் மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகள் பொருந்துவதாக இல்லை என்று வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பத்திரிகையாளரான ஆனந்தகுமார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் காவல் துறையால் பதியப்பட்ட வழக்கு பிரிவுகள் தன்மைகள் குறித்து அரசு வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்டார். அதற்காக அரசு வழக்கறிஞர் திருப்திகரமாக பதில் அளிக்க முடியவில்லை. பின்னர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் பொழுது சட்டப்பிரிவுகளை மாற்றம் செய்து காவல் துறை தாக்கல் செய்யும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஆனந்த் குமார் மீது பதியப்பட்ட வழக்கு தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டார் என்பதற்கு பொருந்தாத வழக்கு பிரிவுகளை காவல் துறை திட்டமிட்டு பதிந்திருப்பதாக வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் வாதிட்டார்.

Advertisment

மேலும் தனிமனித சுதந்திரத்திற்கும் கருத்து வெளியிடும் உரிமைக்கும் ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி நம்பிராஜன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.