Advertisment

“அந்த உச்சந்தலை முத்தம்..” - ‘கர்ணன்’ படம் குறித்து ஜோதிமணி எம்.பி. 

Jothimani MP Twitted about Karnan film

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் ரீதியாக மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் குறித்து பல்வேறு தரப்பினரும்அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Advertisment

இந்நிலையில் கரூர் எம்.பி. ஜோதிமணி, ‘கர்ணன்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “‘கர்ணன்’ ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை, வலியை, எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும், குறியீடுகளும் நிறைய. அந்த உச்சந்தலை முத்தம்... சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம்.பாராட்டுகள் மாரி செல்வராஜ்!” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

jothimani karnan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe