Advertisment

“ஈஷாவில் இது முதல் முறையல்ல” - இளம்பெண் மரணம் குறித்து ஜோதிமணி எம்.பி

jothimani mp tweet about isha yoga centre

கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகாமையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீயைக்காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்தஅவரது கணவர் பழனிகுமார்போலீசில் புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில், நேற்றுஈஷா யோகாமையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ, கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்த ஈஷா யோகாமையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர்பக்கத்தில், "கோவை ஈஷாயோகா மையத்திற்குப் பயிற்சிக்காக வந்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இம்மாதிரி சம்பவம் நடப்பது முதல் முறையல்ல. பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Isha jothimani
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe