Advertisment

வடலூரில் தைப்பூச விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

v

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச விழாவையொட்டி சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நடந்தது. இதில் லட்சக்கணக்காகன பத்கர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் 6 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தைமாத பூசவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு 148வது தைப்பூச திருவிழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடந்து தருமசாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லாம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

Advertisment

v

இதனை தொடர்ந்து 21 - ந்தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. காலை 6 மணி,10 மணி, மதியம்1 மணி, இரவு10 மணி ஆகிய காலங்களில் 7 திறைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை என்று கோசங்களுடன் ஜோதி தரிசனத்தை கண்டுகளித்தனர். நாளை (22ம் தேதி) காலை 5.30 மணிக்கு ஜோதி காட்டப்படும்.

நாளை மறுநாள் (23ம் தேதி) மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருவறை தரிசனம் நடைபெறுகிறது.

v

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர் .டிஎஸ்பிக்கள் நெய்வேலி சரவணன், சேத்தியாத்தோப்பு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர்கள் வடலூர் அம்பேத்கர்,புதுச்சத்திரம் அமுதா, சேத்தியாத்தோப்பு ராஜா மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலைய நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி மாவட்டத்தில் மது, மாமிசக்கடைகள் மூடப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் தைபூச திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையை அறிவித்திருந்தது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

vadalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe