Advertisment

கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்; தலைமைச் செயலாளர் ஆய்வு

Joint Water Project Works Chief Secretary Survey

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணையிலிருந்து குடிநீர் வழங்க பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், 2035 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் திட்டம் பரிசல்துறை மருதூர் ஊராட்சி தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமான பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக் குடிநீர் மூன்றாவது திட்டம் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப்பணிகளையும், பவானி ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம், திட்ட நீரேற்று நிலை தடுப்பணை கட்டுமானப் பணி, கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்ட குழாய் மற்றும் நீர்பின்னேற்றம் தடுப்பு கட்டுப்பாட்டு குழாய் அமைக்கும் பணிகளையும் இன்று (22.10.2023) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர்,குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம் மா.இளங்கோவன், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்றத் தலைவர் மெஹரிபாபர்வின் அசரப் அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Coimbatore inspection
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe