ADVERTISEMENT

“மக்களின் தாகம் தீர்த்திட ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம்” - அமைச்சர் சக்கரபாணி 

01:00 PM Feb 10, 2024 | ArunPrakash

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.27.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க்ல் துறை அமச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் திண்டுக்கல் மாவட்ட மக்களின் தாகம் தீர்த்திட ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம், வயதானவர்களின் இல்லம் தேடி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், நோய் வரும் முன்பே அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வருமுன்காப்போம் திட்டம், மகப்பேறு பெண்களின் நலனைக் காத்திடும் வகையில் மகப்பேறு நிதியுதவித் திட்டம், பொருளாதார நிலையை காரணம் காட்டி பெண்களின் கல்வி கற்றல் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக பெண்கள் கல்வி கற்றலை மேம்படுத்திட புதுமைப் பெண் திட்டம், அனைத்துத் துறைகளிலும் இளைஞர்கள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம், படித்த இளைஞர்களை தொழில் துறையில் மேம்படுத்திட திறன் பயிற்சி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை குறைத்து, அவர்களின் பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராம மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி, இந்த அரசு வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நபார்டு திட்டம், நமக்குநாமே திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கனிமம், 15-வது நிதிக்குழு மானியம் என பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கள்ளிமந்தையம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை, அங்காடி மையம் நியாயவிலை கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.2.64 கோடி மதிப்பீட்டிலும், சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.7.35 கோடி மதிப்பீட்டிலும், தேவத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அங்கன்வாடி மையம், நியாயவிலை கடை கட்டடம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.1.86 கோடி மதிப்பீட்டிலும், மஞ்சநாயக்கள்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணகல் பதித்தல் மற்றும் ஓரடுக்கு மெட்டல் சாலை ஆகிய பணிகள் ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலும், போடுவார்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அங்கன்வாடி மையம் கட்டடம், கணக்கன்பட்டி ஊராட்சியில் பொட்டம்பட்டி கிராமத்தில் சிமெண்ட் சாலை, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், அமரபூண்டி ஊராட்சியில் பள்ளிக்கூடத்தான் வலசில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை, நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைத்தல், மேலக்கோட்டை ஊராட்சியில் எவிக்சன்நகரில் சிமெண்ட் சாலை, பொதுக்கழிப்பறை, கழிவுநீர் வாய்க்கால், நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.5.31 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மேலும், போடுவார்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், கணக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை, எரமநாயக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்ட நிழற்குடை கட்டடம், அமரபூண்டி ஊராட்சியில் கட்டப்பட்ட கலையரங்கம், பொதுச்சாவடி ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன ஆகமொத்தம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ.27.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT