'Joint Action Group meeting soon' - Tamil Nadu Chief Minister welcomes leaders of neighboring states

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவாதித்து சில முடிவுகளை எடுப்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி , கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் கிண்டியில் உள்ளதனியார் ஹோட்டலுக்குதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்திருக்கும் பிற மாநில முதல்வர்களை வரவேற்றார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் கூட்டமானது நடைபெற இருக்கிறது.

Advertisment