ADVERTISEMENT

கட்சியை இணைக்க சொல்லுங்க சார்... கொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏவின் வேதனைக்குரல்

11:12 PM Apr 26, 2019 | jeevathangavel

அதிமுகவில் தற்போது நடந்துவரும் அரசியல் நிகழ்வுகள் அக்கட்சியின் அடிமட்டம் வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று சட்டபேரவை சபரநாயகர் தனபாலிடம் அதிமுக கட்சியின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கொடுத்த மனுவின்படி டிடிவி தினகரன் ஆதரவாளர்களான எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கொடுத்த புகார் அரசியல் வட்டத்தில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த சீனியர் அதிமுக எம்.எல்.ஏ ஒருவரிடம் நாம் பேசிய போது அவர் மனம் கொதித்த நிலையில், என்னங்க சார் இப்படியெல்லாம் நடக்கிறது. யார் சொல்கிறார்கள் அதை ஏன் செய்யவேண்டும், என்று யோசித்து பார்க்கக்கூட எங்கள் கட்சியின் தலைமைக்கு புரியவில்லை என்ற அவர் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுமோ அல்லது தோல்வியை சந்திக்குமோ என்பது ஒருபுறம் இருந்தாலும் நடந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தல் என 22 தொகுதியும் எங்களுக்கு வாய்ப்பாக அமையப்போவதில்லை. இந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் தொடர்ந்து தவறுகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ்ஸும், முதல்வர் இபிஎஸ்ஸும் செய்து வருகிறார்கள்.

இப்போது என்ன தேவை இருக்கிறது என தினகரன் அணி ஆதரவு எம்.எல் .ஏக்கள் 3 பேரை எதற்காக தகுதி நீக்கம் செய்யவேண்டும். இதுவெல்லாம் டெல்லியில் இருந்து வருகிற அறிவுறுத்தலின் படி நடக்கிறது. எந்த பிரச்சனையுமே இல்லை. இப்போது கூட சின்னம்மா மற்றும் டிடிவி.தினகரன் அணியை பகைத்துக்கொள்ளாமல் ஆட்சியை நடத்த முடியும் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் மே 23 ஆம் தேதியோடு முடிந்து போகிற பாஜக கூறுகிற யோசனைப்படி இங்கு எல்லாமே தலைகீழாக செய்கிறார்கள். எங்களுக்கெல்லாம் இதில் துளிகூட விருப்பம் இல்லை. அம்மாவின் ஆட்சி நடத்துகிறோம் என்கிறார் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும். ஆனால் நடைபெறுகிற நிகழ்வுகள் அம்மாவின் ஆட்சிக்கு சாவுமணி அடிப்பதாகத்தான் தெரிகிறது. இப்போது கூட ஒன்றும் முடிந்துபோகவில்லை கட்சியை டிடிவி தினகரனோடு இணைத்து கொண்டு சென்றுவிட்டால் தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் இலையென்றால் அம்மாவின் ஆட்சி மே 23 வுடன் இறுதி என்பதில் மாற்றமில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

வழக்கமாக இயல்பாக பேசக்கூடிய அந்த அதிமுக எம்.எல்.ஏ கோபத்தையும்,வேதனையையும் பரிதாபத்தையும் கலந்து பேசியது நமக்கு ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT