joe biden and kamala harris wishes to tamilnadu cm palanisamy

Advertisment

அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன், துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்க்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வென்றுள்ளார்.அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

joe biden and kamala harris wishes to tamilnadu cm palanisamy

Advertisment

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்காவின் 46- வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றியின் மூலம் தமிழகத்துக்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளார்' என புகழாரம் சூட்டினார்.