j

Advertisment

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக அரசிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் போராட்டங்களை அறிவித்தனர். அதன் பிறகும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

அதனால் இன்று 22 ந் தேதி காலை முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் தர்ணா போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வழக்கம் போல சென்ற மாணவர் 10 மணி வரை காத்திருந்தும் ஆசிரியர்கள் வராததால் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். வீட்டுக்குச் செல்லும் மாணவர்கள் கூறும் போது..

Advertisment

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம். அதனால வராட்டோம் காலை 10 மணி வரை எதிர்பாருங்கள். ஆசிரியர்கள் வந்து பள்ளியை திறந்தால் வகுப்புகளுக்கு போங்க. ஆசிரியர்கள் வரலன்னா 10 மணிக்கு பிறகு வீட்டுக்கு போங்கன்னு சார் சொல்லிட்டாங்க. அதான் திரும்பி போறோம் என்றனர்.