Advertisment

ஜார்க்கண்ட் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (29.12.2019) பிற்பகல் 01.00 மணியளவில்பதவியேற்க உள்ளார். ராஞ்சியில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

Advertisment

jharkhand 11th cm oath ceremony function hemant soren

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அவருடன் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் ஸ்டாலினுடன் ஜார்க்கண்ட் செல்கின்றனர்.

Advertisment
cm oath ceremony Jharkhand jharkhand mukti morchas mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe