Skip to main content

ஜார்க்கண்ட் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்!

Published on 29/12/2019 | Edited on 29/12/2019

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (29.12.2019) பிற்பகல் 01.00 மணியளவில் பதவியேற்க உள்ளார். ராஞ்சியில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். 

jharkhand 11th cm oath ceremony function hemant soren


இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அவருடன் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் ஸ்டாலினுடன் ஜார்க்கண்ட் செல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ஹேமந்த் சோரன் ஏன் கைது செய்யப்பட்டார்?; மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 19.04.2024 தொடங்கிய தேர்தலானது வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி சார்பாக, பீகார், பெங்களூர், மும்பை, டெல்லி என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள், தொகுதி பங்கீட்டில் சில கருத்து மோதல்கள் இருந்தாலும், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சுரங்க முறைகேட்டின் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்தியா கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதே போல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சிகள், பா.ஜ.க மீது குற்றச்சாட்டு வைத்தும், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று (21-04-24) இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலை குனிவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினரை அவமதித்துவிட்டார். பழங்குடியினரை தொடர்ந்து பயமுறுத்தினால் பா.ஜ.க அழிந்துவிடும். பழங்குடியினரை தீண்டத்தகாதவர்களாக பா.ஜ.க கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 180 இடங்களையே வெற்றி பெறும்” என்று கூறினார்.