Skip to main content

அமைச்சர்களுக்கு எதிராக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் போர்க்கொடி ! கோட்டையில் பரபரப்பு !

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
cvs


ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி, சசிகலா வகையறாக்களுக்கு எதிராகவும், சுகாதார துறை செயலாளர்  டாக்டர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் குற்றம் சுமத்தினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். இவரின் குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரித்தார். இதனால், இந்த விவகாரம் பரபரப்பானது. அமைச்சர்களின் இந்த குற்றச்சாட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

t


 இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் தலைமையில் இயங்கும்  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு கடந்த 2- ந்தேதி கூடி ஆலோசித்தது. அந்த ஆலோசனையில், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக குற்றம்சாட்டிய அமைச்சர் சண்முகத்தையும், அவருக்கு ஆதரவளித்த அமைச்சர் ஜெயக்குமாரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அமைச்சர்களின் இத்தகைய போக்குகளை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்தாமல் போனால் ஒவ்வொரு அதிகாரிகளுக்கு எதிராகவும் பொது வெளியில் குற்றம்சாட்டுவார்கள். அதனால் முளையிலேயே இதனை கிள்ளியெறியவேண்டும் என்றெல்லாம் விவாதித்துள்ளனர். மேலும், அமைச்சர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட முடிவுசெய்தனர். 

 

r

 

இது குறித்து தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமும் தங்களின் ஆட்சேபத்தை தெரிவிக்கவும் முடிவு செய்தனர். அமைச்சர்களின் கருத்துக்களுக்கு எதிரான தங்களின் ஆட்சேபத்தையும் கோபத்தையும் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள். இந்த தீர்மானம் தற்போது முதல்வருக்கும் தலைமைச்செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது !


 

சார்ந்த செய்திகள்