Advertisment

கட்சி அலுவலகத்துக்கு வந்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்!! - ஜெயக்குமார் கேள்வி!

DGF

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கில் 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்' என தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்புகள் மேற்கொண்டு வருகிறது. அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு நேற்று எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதற்கிடையே ஓ.பி.எஸ்.சும் விரைவில் தலைமை அலுவலகம் வர இருக்கிறார் என்று அவருடைய ஆதரவாளர் ஜே.டி.சி பிரபாகர் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓ.பி.எஸ். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவது தொடர்பான கேள்விக்கு, “அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கட்சிக்கு தொடர்பில்லாத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஓ.பி.எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில், அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

jayakumar
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe