Published on 07/09/2021 | Edited on 07/09/2021

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் இதுவரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், திமுக அரசை கடுமையாக குறைகூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசும்போது, "திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குதல்; டீசல் விலை 4 ரூபாய் குறைப்பு; நீட் தேர்வு விலக்கு; முதியவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு என பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கப்படுகிறது" என்றார்.