statue

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை இன்று திறக்கப்படுகிறது.

Advertisment

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறக்கப்படுகிறது.

Advertisment

எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர். காலை 10.30 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.

இதேபோல், அ.தி.மு.க.வுக்கு என்று ‘நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழும் தொடங்கப்படுகிறது. அந்த நாளிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிமுகம் செய்துவைக்கின்றனர்.

Advertisment