Advertisment

பூட்டிய வீட்டில் கைவரிசை; போலீசார் தீவிர விசாரணை

Jewelry theft Trichy under serious investigation police

திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டத்தூர் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்(54). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சுப்ரமணியன் சென்றுள்ளார். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும்அவரது மனைவி உருமு தனலட்சுமியும் அன்று வேலைக்கு சென்றுள்ளார்.

Advertisment

இந்நிலையில் வேலைக்கு சென்ற சுப்ரமணியன் மதியம் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் துறையூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறை நடத்திய விசாரணையில் வீட்டில் 4.5 சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்த காவல்துறை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisment

jewelery police Theft trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe