Advertisment

சாராய வியாபாரிகள் வீட்டில் நகை திருட்டு... போலீசார் மீது வழக்கு! 

Liquor dealers steal jewelry at home ... case against police

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே கள்ளச்சந்தையில் மது விற்பனை, அதேபோல் கள்ளச்சாராயம் ஊறல் போன்ற சம்பவங்கள்பெருகிவரும் நிலையில், அதைத் தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், வேலூரில் 2 சாராய வியாபாரிகளின் வீட்டில் சாராய வேட்டையின்போது நகை, பணம் திருடியதாக எஸ்.ஐ மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டு குருமலை அருகே நச்சுமேடு மலைப்பகுதியில் சாராய வேட்டைக்கு அரியூர் போலீசார் சென்றுள்ளனர். அப்போது சாராய வியாபாரிகள் இளங்கோ, செல்வம் ஆகிய இருவரதுவீடுகளின் பூட்டை உடைத்து சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அங்கு சாராயம் மற்றும் சாராய ஊறல்களைப் பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடியதாக புகார் அளிக்கப்பட்டது.இந்தப் புகார் தொடர்பாகஅரியூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ. அன்பழகன் காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

police fake liquor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe