Advertisment

பட்டப்பகலில் அம்மன் கோவிலில் நகை திருட்டு...!

Jewelry theft at Amman temple in broad daylight ... CCTV footage released shocking!

கரூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் ஹாயாக கோவிலின் உள்ளே புகுந்து சாமி சிலையின் கழுத்திலிருந்த தாலி சங்கிலியைப் பறித்து சென்ற சிசிடிசி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் உள்ளது புற்றுக்கண் மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் கோவில் வாசலில் வானத்தை நிறுத்திவிட்டு கோவிலின் உள்ளே நுழைந்தார். கோவிலில் யாரும் இல்லாத நிலையில் உள்ளே புகுந்த நபர் சில நிமிடம் சாமி கும்பிடுவதைப் போல் பாவனை செய்த நிலையில் திடீரென கோவில் உள்ள கருவறைக்குள் நுழைந்து சாமிசிலையின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் மதிப்புள்ள தங்க நகையைத் திருடி கொண்டு நடையைக் கட்டினார். இந்த காட்சிகள் அனைத்தும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

Advertisment

கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident karur police temple
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe