The jewelry store owner who returned from the wedding was shocked

காஞ்சிபுரம் மாநகர எல்லைக்கு உட்பட்ட விளக்கடி கோயில் தெருவில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கீழ்த்தளத்தில் நகைக்கடையும், மேல் தளத்தில் வீடும் உள்ளது. இவர் 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத்தனது வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு உறவினரின் திருமணநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னை சென்றுள்ளார்.

Advertisment

இதனைத்தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மகாவீர் சந்த் இன்று சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குத்திரும்பிச் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisment

மேலும் இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் மகாவீர் சந்த் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத்தீவிரமாகத்தேடி வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டுத்திருமண விழாவுக்கு சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.