Jewelry stolen at brother's wedding

Advertisment

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என்பவர், தன்னுடைய சகோதரரின் திருமணத்திற்குத் திருச்சி குமாரவயலூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்திருந்தார். தான்கொண்டுவந்திருந்த 28.5 சவரன் நகை, 12 ஆயிரம் பணம், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை மணமகன் அறையில் ஒரு பையில் போட்டு வைத்துள்ளார்.

திருமணம் முடிந்த பிறகு மணமகன் அறைக்குச் சென்ற கவிதா, அவர் வைத்திருந்த பையைத் தேடியபோது பை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சகோதரியின் நகை தனது அறையிலிருந்து காணாமால் போனதை அறிந்து மணமகன் வருத்தமடைந்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், காணாமல் போன நகையின் மதிப்பு சுமார் 4.43 லட்சம் ரூபாய்வரை இருக்கலாம் என்று மதிப்பீடு செய்துள்ளனர்.