Advertisment

நகை வியாபாரி வீட்டில் பணம் நகை கொள்ளை...

Jewelry  robs at jewelry shop owner home ...

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது பையூர். இந்த கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் பிரகாஷ். இவர் தனது வீட்டிலேயே நகைகள் செய்து வெளியூரில் உள்ள கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி மாலை பிரகாஷ் தன் குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள அவரது தங்கையின் குழந்தை காதணி விழாவிற்கு சென்று உள்ளார்.

விழாவில் கலந்துகொண்டு மறுநாள் தன் வீட்டுக்கு திரும்பிய வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் குடும்பத்தினர் பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 33 கிராம் தங்க கட்டிகள், ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிரகாஷ் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோன்று திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதி கிராமங்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Robbery jewelry gold
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe