Jewelry robbery  women knife point

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - சேலம் நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டையில் இருந்து மேற்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் இவரது மனைவி பல்கிஸ் பீவி (63), அவரது மருமகள் ஷேகா (20) ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று பட்ட பகல் ஒரு மணி அளவில் திடீரென்று முக கவசம் அணிந்த மூன்று பேர் கொண்ட மர்ம மனிதர்கள் அப்துல் ரஹீம் வீட்டுக்குள் புகுந்தனர்.

Advertisment

பெண்கள் இருவரும் சுதாரிப்பதற்குள் திடீரென அவர்கள் இருவரது கழுத்தில் கத்தியை வைத்து கத்தி சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகளைபறித்ததுடன், வீட்டில்இருந்த பீரோவை திறந்து 25 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொள்ளையர்கள் பெண்கள் இருவரையும் குளியலறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டுதாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து அதே பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர் ஒருவர் கொள்ளைச் சம்பவம் நடந்த அப்துல் ரஹீம் வீட்டிற்கு சென்ற நிலையில் குளியலறை கதவைத்திறந்து பெண்கள் இருவரையும் வெளியே வரவழைத்தார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மக்கள் அடுத்தடுத்து குடியிருக்கும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் முக கவசத்துடன் வந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வெள்ளையூர் உளுந்தூர்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் பயத்தை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகிறது.