
தமிழ்நாட்டில் முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 5 சவரன் கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தினர் பல கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பலர் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றதுஅண்மையில் அம்பலமானது.
பணத்தை வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஆதார், ரேஷன் கார்டு அடிப்படையில் 5 சவரன் நகைக்கடன் பெற்றவர்களின் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம் ஆதாரம் மூலம் சேகரிக்கப்படும். நகைக்கடன் தவணைதவறி இருப்பின், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளைப் பின்பற்றி தொகையை வசூலிக்கலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)