ADVERTISEMENT

நகைக்கடன் முறைகேடு... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!

01:15 PM Sep 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நடைபெற்ற நகைகடன் முறைகேடு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகை கடன்களையும் ஆய்வு செய்யும் வகையில் இந்த குழு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்வதில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 21-ஆம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும் அக்குழுவிற்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐந்து சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் மட்டுமல்லாது, வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீத பொது நகை கடன்கள் அனைத்தையும் ஆய்வு செய்து இந்த குழு அறிக்கை அளிக்கும். கூட்டுறவு பதிவாளர், கூட்டுறவு வங்கியின் தரகு மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர்கள் கொண்ட குழுவை வைத்திருக்கிறார்கள். இந்த குழு தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவீத பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்யும். சென்னை மண்டலத்தை பொறுத்தவரை துணைப்பதிவாளர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்து இதற்கான அறிக்கையை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல மேலாண் இயக்குனர்களுக்கும் இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT