தனியாகச் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகின!

Jewelry flush with a woman who was walking alone ... CCTV Views released ..!

கோவை, காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு வாடகைக்கு கேட்பதுபோல், 'பெண்ணிடம் நகைப் பறிப்பு', 'வீடு புகுந்து 6 சவரன் நகை திருட்டு', 'நகைக்கடையில் நகை வாங்குவது போல் நகையைப் பிடுங்கிச் சென்றது' உள்ளிட்ட 3 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, மிலிதன் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன்.இவர், தனது மனைவி விஜயலட்சுமியோடுகாரமடை காந்தி நகரில் வசித்து வருகின்றார். நேற்று விஜயலட்சுமி தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியில், (தலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் மற்றொருவர்) பைக்கில் வந்தஇருவர், பட்டப்பகலில் அவர்கழுத்தில் அணிந்திருந்த 2.1/2 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்றனர். இந்தச் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரமடை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காரமடை காவல் துறையினர் கூறுகையில், இக்குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலைச் சேர்ந்தவர்கள். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.இன்னும் இரு தினங்களில் குற்றவாளிகள் சிக்குவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

Coimbatore
இதையும் படியுங்கள்
Subscribe