Advertisment

நகைக்கடன் தள்ளுபடி- மீண்டும் ஒரு வாய்ப்பு!

Jewelry Discount- A chance again!

Advertisment

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையெனக் கூறி நகைக்கடன்கள் தள்ளுபடி சலுகை கிடைக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும். சரியான விவரங்களை அளித்த பின்னர் சரிபார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 (50%) பேருக்கு கடன் தள்ளுபடி உண்டு. 40 கிராமுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்தவர்களின் எண்ணிக்கை 22,52,226 ஆகும். 22,52,226 கடன்தாரர்களில் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களாக 10,18,066 பேர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 88.50% நகைக்கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

gold money
இதையும் படியுங்கள்
Subscribe