கோவை மலுமிச்சம்பட்டி வி.ஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விலோபி ஆல்பர்ட் ஃபெர்னாண்டஸ் (62). கார்மன்ஸ் தொழிலதிபர். இவரது வீட்டில் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையத்தை சேர்ந்த சண்முகப்பிரியா (42) என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

Advertisment

jewellery

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதியில் இருந்து எந்த அறிவிப்பும் இன்றி சண்முக பிரியா வேலைக்கு வராமல் நின்றதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த விலோபி ஆல்பார்ட் வீட்டின் இருந்த பிரோவை சோதனை செய்த போது அதில் இருந்த 16 சவரன் நகை மாயமானது தெரிவந்துள்ளது.

Advertisment

இதையடுத்து சண்முகபிரியாவை அழைத்து விசாரித்த போது அவர் நகைகளை எடுத்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆல்பர்ட் அவரை பிடித்து செட்டிபாளையம் போலீஸில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருடிய நகைகளை திருப்பூரில் அடகு கடையில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.