Advertisment

திருச்சி பைனான்ஸ் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை!!

theft

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவர் அரவிந்த் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரதீபா. முருகையன் நேற்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தார்.

Advertisment

இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தபோது முன்புற கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 100 பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பின்பக்க கதவும் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகையன் உறையூர் போலீசில் புகார் அளித்தார்.

எஸ்ஐ பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்த நிலையில் பூட்டு உடைக்கப்படாமல் ஜன்னலின் அருகில் வைக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில் தெரிந்த நபர் யாரோ தான் பூட்டை திறந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Finance Theft thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe