புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி அருகில் உள்ள அரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைநாடியான். இவரது மனைவி சத்தியா(35). இருவரும் கொத்தமங்கலத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு கடந்த திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zz58.jpg)
இருவரும் மறமடக்கி கிராமத்தில் உள்ள வாழைத்தோப்புகளுக்கு இடையே உள்ள பாதையில் சென்று கொண்டிருந்த போது இவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நான்கு பேர் திடீரென முன்னால் வந்து மறித்துள்ளனர். பின்னர், குழந்தைநாடியான், சத்தியா இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் கிடந்த சங்கிலி, தோடு, கொழுசு, செல்போன், பையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணம் என அவர்கள் வைத்திருந்த அனைத்தையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Follow Us