Advertisment

புதுக்கோட்டையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து நகை பணம் கொள்ளை! பொதுமக்கள் அச்சம்!

robbery

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையம் எல்லையில் உள்ள ஒத்தக்கடை சீனுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (54) மோசகுடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். அவரது மனைவி லில்லி விசலூர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இருவரும் இன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டு கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டிற்குள் இருந்த பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். அதேபோல புதுக்கோட்டை தாவுது மில் சிப்பாட் ஹைவேஸ் சிட்டி பகுதியை சேர்ந்த ஓய்வு சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மகன் கார்த்திகேயன் (29) சொந்த வேலையாக வெளியூர் சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டு பூட்டு பீரோ உடைக்கப்பட்டு 30 பவுன் நகை, ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த ரூ.8 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் மற்றும் அதிகாலையில் கீரமங்கலத்தில் நடந்த முகமூடி கொள்ளை சம்பவங்கள் மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் திருடர்கள் முகமூடி அணிந்து வருவதால் போலீசாரும் திருடர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Robbery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe