ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான பனிமலர் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் உள்பட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றன.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை. மேலும் ஜேப்பியார் கல்வி குழும அதிகாரிகள், உறவினர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 100-க்கும்அதிகமான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.